Breaking News

கனமழை காரணமாக சென்னை புத்தக கண்காட்சி இன்று ( 08.01.2024) விடுமுறை.! பபாசி அறிவி்ப்பு.

NEWS COVER
0
கனமழை காரணமாக சென்னை புத்தக கண்காட்சி இன்று ( 08.01.2024) விடுமுறை.! பபாசி அறிவி்ப்பு.
GET NEWS COVER

தமிழகத்தில் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் 47 வது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் நேற்று பெய்த கனமழையினால் புத்தக கண்காட்சி அரங்கின் வெளிப்புறம் மழைநீர் தேங்கி காட்சியளித்தது. மேலும் இன்றும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் புத்தக கண்காட்சி அரங்கின் வெளியே மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் சில அரங்குகளில் மழை நீர் கசிவதையும் காண முடிந்தது.
 எனவே அவற்றை பழுதுபார்க்கவும் மக்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுவதை தடுக்கவும் இன்று ஒரு நாள் மட்டும் ( 08.01.2024) சென்னை புத்தக கண்காட்சி நடைபெறாது என்றும் பப்பாசி தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் அறிவித்திருக்கிறது.

Tags: தமிழக செய்திகள்