ஜனவரி 18 விடுமுறை!? தமிழக அரசு பரிசீலனை!
NEWS COVER
0
ஜனவரி 18 விடுமுறை!? தமிழக அரசு பரிசீலனை!
GET NEWS COVER
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு
வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ம் தேதி முதல் ஜனவரி 17 ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் இதனால் கடந்த 2 நாட்களாக தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் திரும்பி வர வசதியாக வரும் ஜனவரி 18 ம் தேதி வியாழக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அதுகுறித்து பரிசீலித்து விரைவில் விடுமுறையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்