2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு.!
NEWS COVER
0
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு.!
GET NEWS COVER
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் பெண் வாக்காளர்கள் 3.14 கோடியும், ஆண் வாக்காளர்கள் 3.03 கோடியும் ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 8,294 பேரும் உள்ளனர்.
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே குறைவான வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக உள்ளது.
அங்கு 1,72,140 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர். இந்த தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் 13 லட்சம் பெயர் சேர்த்துள்ளனர் என்றும் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பெயர் நீக்கியதற்கு காரணம் முகவரி மாற்றுவதற்காகவும், இறந்தவர்கள், மற்றும் போலி ஆவணங்கள் உள்ளிட்டவைக்காக 6 லட்சம் வாக்காளரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்