Breaking News

ஜனவரி 9 ம் தேதி முதல் அரசு பேருந்துகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!

NEWS COVER
0
ஜனவரி 9 ம் தேதி முதல் அரசு பேருந்துகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!
GET NEWS COVER

தமிழகத்தில் வரும் ஜனவரி 9ம் தேதி முதல் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தம் செய்ய போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கனவே கடந்த மாதம் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையை உடனே தொங்க வேண்டும். அதேபோன்று காலியாக உள்ள சுமார் 20000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் செய்யக்கூடிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.

 தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழில் நல ஆணையம், அரசு தரப்பில் இருந்து அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அரசு எந்தவிதமான உறுதியும் அளிக்கவில்லை. இரண்டு முறை பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோதும் எந்த உத்தரவாதமும் தமிழக அரசு வழங்கவில்லை என்றும்

இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவு எதும் ஏற்படாத காரணத்தால் வரக்கூடிய ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கிறார்கள். 


Tags: தமிழக செய்திகள்