தோணி ரசிகர் அதிர்ச்சி மரணம்.! கடலூரில் சோகம்.!
NEWS COVER
0
தோணி ரசிகர் அதிர்ச்சி மரணம்.! கடலூரில் சோகம்.!
GET NEWS COVER
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகர் ஆவார்.
கோபி கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி மீது உள்ள தீவிர பற்றால் தனது வீட்டினை CSK அணியின் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து முகப்பில் தோனியின் படத்தினை வரைந்து, 'Home of Dhoni fan' என்று எழுதி அசத்தினார். அப்போது இந்த படம் வைரலாக பரவியது. இதன் மூலம் தோனியின் தீவிர ரசிகராக அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
மேலும் தோணி தனது வீட்டிற்கு வர வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் கோபி கிருஷ்ணனனை நேற்று இரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோனியின் வெறித்தனமான ரசிகரான கோபி கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags: தேசிய செய்திகள்