Breaking News

சிவில் நீதிபதி தேர்வு ரத்து.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

NEWS COVER
0
சிவில் நீதிபதி தேர்வு ரத்து.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
GET NEWS COVER

TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி பதவிக்கு தேர்வாணவர்களின் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் கலந்த சிவில் நீதிபதிக்கான தேர்வில் தேர்வாணவர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டது இந்த முறை எளிய பின்னணியில் இருந்து பலர் நீதிபதியாக தேர்வானதால் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிக மதிப்பெண் எடுத்த BC மற்றும் MBC மாணவர்களை பொதுப் பட்டியலில் சேர்க்கவில்லை என்றும் இதர குளறுபடிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கில் தற்போது வெளியிடப்பட்ட பெயர் பட்டியலை ரத்து செய்து புதிய பெயர் பட்டியலை சரியான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி வெளியிடுமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஏற்கனவே தேர்வானவர்கள் மத்தியில் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்