44வது செஸ் ஒலிம்பியாட் இலவச பேருந்து சேவை அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் தமிழக அரசு இலவச பேருந்து சேவை அறிவிப்பு.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதில் 180 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகம் இதற்காக பொதுமக்களுக்கு வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை மத்திய கைலாஷ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு எஸ் ஆர் பி டூல்ஸ் முட்டுக்காடு வழியாக 19 இடங்களில் பேருந்து நின்று மாமல்லபுரம் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment