தமிழகத்தை அச்சுறுத்தும் "SITRANG" புயல்!! வானிலை மையம் எச்சரிக்கை.
NEWS COVER
0
தமிழகத்தை அச்சுறுத்தும் "SITRANG" புயல் தமிழக மக்களே உஷார்!! வானிலை மையம் எச்சரிக்கை.
GET NEWS COVER
மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பின்பு மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி வரும் அக்டோபர் 22 ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு SITRANG புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்