Breaking News

44வது செஸ் ஒலிம்பியாட்! டிக்கெட் விலை விவரம் மற்றும் மொபைல் மூலம் பார்க்க ஏற்பாடு! முழு விவரம்

NEWS COVER
0
44வது செஸ் ஒலிம்பியாட்! டிக்கெட் விலை வெளியீடு மற்றும் மொபைலில் பார்க்கும் வசதி! முழு விவரம்!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28ம் தேதி செஸ் தொடக்க விழாவுடன் தொடஙகுகிறது.29ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் தொடரை நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு நடத்தி அசத்தும் வகையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் காண மாணவ மாணவியருக்கு ரூ.200-ரூ.300 ஆக டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 செஸ் போட்டியை நேரில் காண இந்தியர்களுக்கு ரூ.2000-3000 ஆகவும்,

 வெளிநாட்டவர்களுக்கு ரூ.6000 முதல் ரூ.8000 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செஸ் போட்டிகளை மொபைல் மூலம் இண்டெர்நெட்டில் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Chess Olympiad, Live Chess, Chess 24 ஆகிய இணையதளங்கள் மூலம் செஸ் போட்டிகளை நேரலையாக மொபைலில் பார்க்கலாம்.

Tags: தமிழக செய்திகள்