நாளை முதல் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம்! முழு விவரம்
NEWS COVER
0
தனியார் பள்ளிகள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம்! தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.
NEWS COVER
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியூர் என்ற பகுதியில், இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்தி இண்டர்நேஷ்னல் பள்ளியில், 12 ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளை இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில், தமிழக காவல்துறையின் பாதுகாப்பை மீறி, போராட்டகாரர்கள் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்தனர்.
அந்த பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்கள், விடுதியில் இருக்கின்ற சிலிண்டர் உள்பட அனைத்தையும் தீக்கிரையாக்கின. பள்ளி ஆய்வகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டிருக்கிறது. மேஜை நாற்காலிகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. பள்ளி வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதன் மூலம் அந்த பள்ளியில் 50 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி நாளை தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பில் பொது வேலைநிறுத்தத்தை தாங்கள் மேற்கொள்ள போவதாகவும் தமிழக அரசு இதில் தலையிட்டு நல்லதொரு முடிவை காண வேண்டும். இல்லையெனில், தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, பள்ளிகளை மூடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்