கலவரத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை! அமைச்சர் அறிவிப்பு
கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை.அமைச்சர் அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரத்தில் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பள்ளியின் சொத்துக்கள் மேஜை நாற்காலிகள், பேருந்துகள், மின்விசிறிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் புதிய சான்றிதழ்கள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Comments
Post a Comment