சுங்கசாவடியில் வேகமாக வந்து மோதிய ஆம்புன்ஸ்! பதைபதைக்கும் காட்சி.

சுங்கசாவடியில் வேகமாக வந்து மோதிய ஆம்புலன்ஸ்! பதைபதைக்கும் காட்சி.

கர்நாடக மாநிலம்  ஷிரூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில்  நேற்று மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் ஒன்று டோல்கேட்டை கடக்க வேகமாக வந்து கொண்டிருந்தது.

 ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில்  மூன்று தடுப்பு கட்டைகளில் இரண்டு அகற்றப்பட்டது. மற்றொன்றை டோல்கேட் ஊழியர் அகற்றிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 தடுப்புகள் மீது மோதாமல் இருக்கவும், டோல்கேட்டில் மெதுவாக செல்லவும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகத்தை குறைக்க பிரேக் பிடித்தார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ்  பாய்ந்து வந்து டோல்கேட் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி, மற்றும் 2 உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் டோல்கேட் ஊழியர் ஒருவரும் உடல் நசுங்கி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஓட்டைநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க:

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??