தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்! தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்! தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளரான தயானந்த் கட்டாரியா IAS அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தச் சட்ட முன் வடிவை கடந்த ஜனவரி 7 ம் தேதியன்று தமிழக சட்டபேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த கொண்டு வந்தார்.
அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலங்களும் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு தான் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment