Breaking News

"பெண்கள் பாதுகாப்பு" தமிழ்நாடு அரசு திருத்தங்கள் அரசிதழில் வெளியீடு.

NEWS COVER
0
"பெண்கள் பாதுகாப்பு" தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு!

பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்து அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில்  வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு அது தொடர்பாக கருத்துக்கேட்கப்பட்ட நிலையில், விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

 அதன்படி,
 
1. வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண் பயணிகளை முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுப்பது கூடாது எனவும்

2. வாகனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்த கூடாது. மேலும் நடத்துனர் எச்சரிக்கை விடுத்தப் பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனவும்,

 3. பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும்போது தவறான நோக்கில் தொடக்கூடாது.

4. பெண் பயணி வாகனத்தில் பயணிக்கும் போது, பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகளை கேட்கக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டுமெனவும் காவல் துறையினர் கேட்கும்போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும் மேலும் நடத்துநர் இல்லாத சமயங்களில் ஓட்டுநரை பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்