Breaking News

சுங்கச்சாவடிகள் அகற்றம்! மத்திய அரசு புதிய திட்டம்.

NEWS COVER
0
சுங்கச் சாவடிகள் அகற்றம்! மத்திய அரசு புதிய திட்டம்.
                  GET NEWS COVER
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து   ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. இதன் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கால விரயம், சில்லறைத் தட்டுப்பாடு, எரிபொருள் வீணாவது போன்ற சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. 

ஒட்டுமொத்தமாக 90% சுங்கச்சாவடிகளில் இருக்கும் ஐந்து நுழைவாயில்களில், 4 நுழைவாயில்கள்  ஃபாஸ்டேக் பரிவர்த்தனைக்காக  ஒதுக்கப்பட்டன. ஒன்றில் மட்டும்  பணமாக சுங்கவரியை செலுத்த முடியும். எனினும் இத்தகைய நடைமுறையில் தொடர்ந்து சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து  சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக "நம்பர் பிளேட் ரீடர்" என்ற புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட ஒரு சில  இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள், பொருத்தப்பட்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும். பின்னர், அந்த நம்பர் பிளேட் எண் மூலம் வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக "நம்பர் பிளேட் ரீடர்" கேமராக்கள் பொருத்தபட உள்ளது. 

இதற்காக சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி நிறுவனங்கள் வழங்கும் நம்பர் பிளேட்டை அனைத்து வாகனங்களிலும் கட்டாயம் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனைவரும் இந்த நம்பர் பிளேட்களை தங்களது வாகனங்களில் பொருத்த வேண்டும். இதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் பிறகு அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும் என்றும், மேலும் ஃபாஸ்டேக் கட்டண வசூல் முறை ரத்து செய்யப்படும்.

 இதற்கான நடவடிக்கைகளை அடுத்த ஒரு ஆண்டுக்குள் செய்து முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Tags: தேசிய செய்திகள்