Breaking News

ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகன காப்பீடு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

NEWS COVER
0
லைலென்ஸ் இருந்தால் மட்டுமே இனசூரன்ஸ்! நீதிமன்றம் அதிரடி!


வாகனங்களுக்கு காப்பீடு செய்யும் போது அதன் உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என  இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர் கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்து விட்டு தனது சகோதரர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருவள்ளூர் ,சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து தினேஷ்குமாரின் பெற்றோர் ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், காப்பீடு நிறுவனம் மனுதாரர்களுக்கு மொத்தம் 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீடாக ஆண்டுக்கு 7.5
சதவீத வட்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என அதிரடி  உத்தரவிட்டார்.

மேலும் ஒரு வாகனத்தை காப்பீடு செய்யும் போது அதன் உரிமையாளருக்கு முறையான ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் தான் பார்க்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்