தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை! தமிழக அரசு அறிவிப்பு.
NEWS COVER
0
தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை! தமிழக அரசு உத்தரவு.
தமிழ்நாட்டில் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் நடத்திட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி சென்னையில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் தெருவில் விற்பனை செய்பவர்கள் ரூபாய் 100 ரூபாய் செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாகும்.
மேலும் அனைத்து விதமான சிறிய மற்றும் பெரிய உணவு விற்பனை மற்றும் நட்சத்திர விடுதி வரை உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற வேண்டியதும் கட்டாயம்.
இந்நிலையில் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதியுள்ள மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கிடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மண்டலம் மற்றும் வார்டு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் போது முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் மற்றும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு அருகில் விற்பனைக்கு உரிய இடங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் கடைகள் அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்