ஓணம் பண்டிகையை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!
NEWS COVER
0
ஓணம் பண்டிகை! 9 மாவட்டங்களுக்கு விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு
ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் 8 ம் தேதி நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வாழும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொணடாடிடும் வகையில் ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் சேர்த்து விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
Tags: தமிழக செய்திகள்