ஆதரவற்ற மகளிர் மற்றும் கைம்பெண்களுக்கு நல வாரியம்! தமிழக அரசு அரசாணை.
NEWS COVER
0
ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்கள் நலவாரியம்! தமிழக அரசு அரசாணை.
GET NEWS COVER
ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்கள் நல வாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதிசெய்ய தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதா ஜீவன் அறிவித்தார்.
அதன்படி ஆதரவற்ற மகளிர் மற்றும் விதவைகள் நல வாரியம் அமைக்க அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதனால் சமூக நலவாரியம் கலைக்கப்பட்டு அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்கள் நல வாரியத்துடன் இணைக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்