2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் பற்றிய தகவல்கள்!

2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்! முழு விவரம்!
GET NEWS COVER

தீபாபளி பண்டிகையின் மறுநாளான இன்று (25.10.2022) மாலை இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

சூரிய கிரகணம் என்றால் என்ன?
  சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் கிட்டதட்ட ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது சூரியணை சந்திரன் மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படும்.
அந்த சமயத்தில் சூரிய ஒளி படாமல் சந்திரனை காணலாம். 

சூரியணை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும்.

சூரியணின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதி நேர சூரிய கிரகணம் எனப்படும்.

மேலும் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்க முடியாத சமயங்களில் சூரியணின் வெளிவட்ட விளிம்புகள் வெளியில் தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும்.

மேலும் இன்று இந்தியாவில் நிகழ இருப்பது பகுதி நேர சூரிய கிரகணம் ஆகும்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.29 மணிக்கு தொடங்கி மாலை 5.40 மணி வரை இந்த சூரிய கிரகணம் நிகழும் என்று மத்திய புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.

கிரகணத்தின் போது செய்ய கூடாதவை

× இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது.
× கர்ப்பிணி பெண்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
× கிரகண நேரத்தில் உணவருந்த கூடாது.
× கடிணமான பொருட்களை தூக்க கூடாது.
× நோயாளிகள் யாரும் கிரகண நேரத்தில் வெளியில் வர கூடாது.

கிரகண நேரத்தில் வெளியேறும் கதிர்வீச்சு காரணமாக பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இத்தகைய கட்டுபாடுகள் விதிக்கப்படுகின்றன.

மேலும் இந்த சூரிய கிரகண நிகழ்வை பொதுமக்கள் எளிதாக கண்டுகளிக்க டிவி மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் நேரடி ஓளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??