Breaking News

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29ல் தொடங்குகிறது!! வானிலை மையம் தகவல்.

NEWS COVER
0
அக்டோபர் 29ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்.

GET NEWS COVER

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக கலந்து சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

 இந்நிலையில் அந்தமான் கடல் அருகே உருவான சிற்றாங் புயல் நேற்று ஒடிசா அருகே அதிகாலை கரையை கடந்தது. தமிழகத்தில் சற்றே மழை ஓய்ந்திருந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் நாகை மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் கடலூர் விழுப்புரம் சேலம் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் மேலும் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே அந்நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags: வானிலை செய்திகள்