குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம்! மத்திய அரசு புதிய முடிவு.
NEWS COVER
0
பிறப்பு சான்றிதழ் உடன் ஆதார் எண் வழங்க முடிவு!! மத்திய அரசு புதிய திட்டம்.
GET NEWS COVER
குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் உடன் சேர்த்து ஆதார் எண்ணையும் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது.
தற்போது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
எனவே ஆதார் எண்ணை இனிமேல் குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழுடன் சேர்த்து வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 134 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்பட்டு பின்னர் அந்த குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் அப்டேட் செய்யப்படுகிறது.
தற்போது இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், விரைவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யுடிஏ (UIDAI) மேற்கொண்டு வருகிறது.
மேலும் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் அல்லது செல்போன் எண் மாற்றம் ஆகியவற்றை ஆன்லைனில் எம்-ஆதார் செயலி மூலமாகவோ அல்லது ஆதார் மையங்களில் 50 ரூபாய் கட்டணமாக செலுத்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தேசிய செய்திகள்