பிசிசிஐ யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு!

பிசிசிஐயின் புதிய தலைவரானார் ரோஜர் பின்னி!!  பொதுக்குழு கூட்டத்தில் முடிவு.
GET NEWS COVER

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 91 வது ஆண்டு பொது குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 ஏற்கனவே பிசிசிஐயின் தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தற்பொழுது பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் இந்திய அணி வீரரும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் பிசிசிஐ யின் செயலாளராக ஜெய்ஷாவே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??