செங்கல்பட்டு அருகே பயங்கரம்!! புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்!

புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்!! செங்கல்பட்டு அருகே பயங்கரம்! போலீஸ் விசாரணை.

GET NEWS COVER
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்துள்ள சித்திரவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது 12 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5 ம் தேதி அவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் உள்ள மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர் வேலை செய்து கொண்டிருந்தபோது பாழடைந்த மின்கம்பம் உடைந்து அருகில் இருந்த சிறுமியின் மேல் விழுந்தது.இதில் படுகாயம் அடைந்த சிறுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

 இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலந்த 14ஆம் தேதி சிறுமி உயிர் இழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து வந்து அங்குள்ள மயானத்தில் சிறுமியை அடக்கம் செய்தனர்.  இந்நிலையில் நேற்று மயானத்தில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு பக்கம் தோண்டப்பட்டதற்கான அடையாளம் இருந்தது மேலும் அங்கு மஞ்சள் தூள் தலை முடி உட்பட சில மர்மமான பொருட்கள் அங்கு சிதறி கிடந்தது. 
இதை பார்த்து அச்சமடைந்த ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  
சம்பவ இடத்தை வந்து பார்வையிட்ட சித்தாமூர் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சிறுமியின் பிரேதத்தை தோண்டி எடுத்தனர். அப்பொழுது சிறுமியின் புதைக்கப்பட்ட உடலில் தலை மட்டும் தனியாக வெட்டி எடுத்து காணாமல் போயிருந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியின் உடலை மறுபிரேத பரிசோதனைக்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் உயிரிழந்த சிறுமி வீட்டிற்கு மூத்த குழந்தை என்பதால் மேற்படி சிறுமியின் தலையை மாந்திரீக செயல் செய்பவர்கள் யாரேனும் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு போனார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் தலை மட்டும் காணாமல் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??