ஆதார் எண் கட்டாயம்! தமிழ்நாடு மின்சார வாரியம் ( TANGEDCO) அறிவிப்பு.
NEWS COVER
0
ஆதார் எண் கட்டாயம்! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.
மின்சார கட்டணத்தில் சலுகைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் வரை இலவசம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
அரசின் சார்பில் அளிக்கப்படும் அனைத்து வகையான சலுகைகள் மற்றும் சேவைகளுக்கு தற்போது ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை, வேறு வகையான ஆவணங்களை அளிக்கலாம்.
அதன்படி,
ஆதார் பதிவு சீட்டு,
ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்த நகல்
வங்கி புத்தகம்
வாக்காளர் அடையாள அட்டை,
ரேஷன் கார்டு,
நிரந்தர கணக்கு எண்,
பாஸ்போர்ட்,
ஓட்டுநர் உரிமம்,
உள்ளிட்ட ஆவணங்களை அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் மின்சார கட்டணம் செலுத்தும்போது ஆதார் எண்ணை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: நுகர்வோர் செய்திகள்