நாளை 08.11.2022 சந்திர கிரகணம்!! வெறும் கண்களால் பார்க்கலாம்!! முழு விவரம்.
NEWS COVER
0
நாளை ( 8.11.2022) இந்த ஆண்டின் சந்திர கிரகணம்!! முழு விவரம்.
GET NEWS COVER
நாளை 8.11.2022 இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஆண்டுக்கு இரண்டு தடவை நிகழும்.
சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வு சந்திர கிரகணம் எனப்படும். சந்திரனின் நிழல் முழுவதுமாக பூமியின் மேல் விழும் போது நிலா ரத்த சிவப்பு நிறமாக காட்சியளிக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை சந்திர கிரகணம் வரை நிகழும். ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் சந்திரனின் நிழல் முழுவதுமாக விழுவது முழு கிரகணம் எனப்படும். கருமையான நிழல் பகுதியாக காட்சியளிப்பது பகுதி சந்திர கிரகணம் எனப்படும்.
மேலும் இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு பகுதிகளான கொல்கத்தா, டெல்லி, சிலிகுரி, பாட்னா, கவுகாத்தி உள்ளிட்ட பகுதிகளில் முழு சந்திர கிரகணமாகவும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் பகுதி கிரகணமாகவும் காட்சியளிக்கும்.
மேலும் இந்த சந்திர கிரகணகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் எனவும் புவி அறிவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்