100 யூனிட் இலவச மின்சாரம்!! எந்த மாற்றமும் இல்லை!! மின்சார வாரியம் அறிவிப்பு.
NEWS COVER
0
100 யூனிட் இலவச மின்சாரம்!! எந்த மாற்றமும் இல்லை!! மின்சார வாரியம் அறிவிப்பு.
GET NEWS COVER
ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை இணைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சார வசதி பொருந்தும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் மின்சார நுகர்வோர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை தங்கள் பெயரில் உள்ள மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒருவர் 5 மின் இணைப்புகளை வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் அவருக்கு பொருந்தும் எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என தமிழநாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆதார் மின் இணைப்பு திட்டத்திற்காக அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் டிசம்பர் மாதம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்