நவம்பர் 16ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
NEWS COVER
0
நவம்பர் 16ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
GET NEWS COVER
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொரர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட தமிழகத்தின் 22 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்