Breaking News

2 மாவட்டங்களில் அதிகமாக பரவும் மெட்ராஸ் "ஐ"!! தனிமைப்படுத்தல் அவசியமா? அமைச்சர் விளக்கம்

NEWS COVER
0
மெட்ராஸ் "ஐ" பரவல் !!தனிமைப்படுத்துதல் அவசியமா!?? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்.
GET NEWS COVER

மெட்ராஸ் "ஐ" எனப்படும் கண் நோய் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை மழைக்காலங்களில் பரவுவது வழக்கம். தன். இது வைரஸ் தாக்குதலால் உடனடியாக பரவும் தன்மை கொண்டது.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் "ஐ" குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்து வருகிறது. இதனை பார்வையிட்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

"மெட்ராஸ் "ஐ"எனப்படும் கண் நோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் மக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். இந்த பாதிப்பு இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் இதற்கான மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சேலம் மற்றும் தர்மபுரி........

தற்போது சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 2  மாவட்டங்களில் மெட்ராஸ் "ஐ" பாதிப்பு அதிகமாக உள்ளது மேற்படி பாதிப்பு உள்ளவர்கள் சுய சிகிச்சை எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் சென்னையில் இதற்காக 10 இடங்களில் அரசின் சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

மெட்ராஸ் "ஐ" உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டியவை 

1. இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் 3 அல்லது 4 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. ஒருவர் பயன்படுத்திய மருந்தை வீட்டில் மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

3.  மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கோ செல்ல வேண்டாம்.

4. கண்களை வெறும் கைகளால் தேய்க்கவோ மருந்து போடவோ கூடாது.

5. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.  

மேலும் இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு  3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும் என்பதால் மக்கள் இது குறித்து பதட்டம் அடையாமல் முன்னெச்சரிக்கையுடன் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.







Tags: தமிழக செய்திகள்