நவம்பர் 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! கனமழைக்கு வாய்ப்பு!!
NEWS COVER
0
நவம்பர் 9 முதல் மீண்டும் கடமலைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
GET NEWS COVER
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி அன்று தொடங்கிய வடகிழக்க பருவ மழை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வந்தது. இதில் சென்னையில் அதிக கன மழை பெய்து கடந்த 2 நாட்களாக சற்றே மழை ஓய்ந்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் வரும் நவம்பர் 9ஆம் தேதி தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் வலுவடைந்து தமிழக மற்றும் புதுவையை நோக்கி நகரக்கூடும் அந்த சமயத்தில் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்