மிரட்டும் கனமழை!! சில மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
NEWS COVER
0
அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!.... முழு விவரம் என்ன??
GET NEWS COVER
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது இன்று சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது எனவே இந்த மழையை சமாளிக்கும் பொருட்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
1. முதலில் மழைக்காலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நமது வீட்டில் உள்ள டார்ச் லைட், செல்போன்கள் மற்றும் எமர்ஜென்சி விளக்குகள் இன்வெர்ட்டர்,பேட்டரி போன்றவற்றை முழுமையாக சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்வது நல்லது.
2. அதேபோல் மழைக்காலங்களில் செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அடிக்கடி வீடியோ பார்ப்பது பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்ப்பதால் விரைவில் பேட்டரி தீர்ந்து போகும் வாய்ப்பு குறைவு.
3. மேலும் நீர் மோட்டார் பயன்படுத்துபவர்கள் முழுவதுமாக தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்
4. வீட்டில் குடிப்பதற்கு குழாய் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் காய்ச்சிய நீரையே பருக வேண்டும்.
5. மேலும் நமக்கு தேவையான அவசரகால மாத்திரைகள், மருந்துகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கிக் வைத்து கொள்வது நல்லது.
6. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளநீர் வரும் அபாயம் உள்ள மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவதும் நல்லது.
9. வீட்டின் அருகே விழும் நிலையில் மரங்களோ மின்கம்பங்களோ இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
10. மழைக்காலங்களில் செருப்புகள் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
11.குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம்.
12. மழை பெய்யும் போது எந்த மரத்தின் அடியிலும் நிற்க வேண்டாம்.
13.மேலும் மரத்தின் அடியில் நமது இரு சக்கர வாகனம் கார் போன்றவற்றை நிறுத்த வேண்டாம்.
14.கனமழை எச்சரிக்கை உள்ள நிலையில் கூடுமானவரை வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
15.மழை பெய்யும் சமயங்களில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை முழுவதுமாக மூடி வைக்க வேண்டும்.
16. மழை வெள்ளநீர் உள்ளே புகும் அபாயம் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது முக்கியமான ஆவணங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் பாதுகாப்பான பெட்டிகளில் போட்டு பூட்டி வைக்க வேண்டும்.
17. வீட்டின் தண்ணீர் ஒழுகும் இடங்களில் ஏதேனும் முக்கியமான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே பார்த்து பாதுகாப்பாக இடங்களில் எடுத்து வைக்கவும்.
18. மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் வாகனங்களில் வாகனங்களில் செல்வோர் சற்று கவனமுடன் செல்வது நல்லது.
19.மேலும் எந்தவித பொய் செய்திகளையோ வதந்திகளையோ பரப்ப வேண்டாம்.
20. அவசர உதவிகள் தேவைப்படும் போது அரசால் வழங்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த முக்கிய தகவல்களை அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து அனைவரும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாக இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
என்றென்றும் மக்கள் நலனில் உங்கள் GET NEWS COVER
Tags: தமிழக செய்திகள்