சென்னை கால்பந்து வீராங்கனை அதிர்ச்சி மரணம்!! பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம்!!.

கால்பந்து வீராங்கனை மரணம்!! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!! முழு விவரம்.
GET NEWS COVER
சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா இன்று காலை சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார் இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவரது மகள் பிரியா. இவர் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை?ஆவார். இவருக்கு காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னை புறநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவரது வலது காலும் பின்னர் அகற்றப்பட்டது.
பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளம் கால்பந்து வீராங்கனை பிரியா இன்று காலை (15 11 2022 )சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்களும் நண்பர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர் மேலும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் மருத்துவரின் அலட்சியம் தான் எனவும் தவறான சிகிச்சையே காரணம் எனவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி  அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் காவல்துறை   பேச்சுவார்த்தை நடத்தி உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே இதுகுறித்து விசாரணை நடத்திய மருத்துவ கல்வி இயக்குனர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றிய  மருத்துவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??