ஒரே பயண சீட்டு!! முதல்வர் ஆலோசனை.

ஒரே பயண சீட்டு!!  முதல்வர் ஆலோசனை! விரைவில் அறிவிப்பு.

GET NEWS COVER

சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நேற்று (17.11.2022)தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் புறநகர் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் உருவாக்கப்பட்டது. இதில் 4 துணை குழுக்கள் உள்ளன.

இதில் மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள், மற்றும் சென்னை புறநகர் ரயில்கள், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரே பயணச்சீட்டு வழங்கும் முறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒரே பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்பட்டால் மக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??