சுங்கச்சாவடிகள் மூடப்படுமா? மத்திய அமைச்சர் தகவல்!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மூடப்படுமா?!! மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்.

GET NEWS COVER
மாநிலங்களவையில் சுங்கச்சாவடிகள் குறித்த திமுக எம்பி வில்சனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதில் அளித்தார்.

அதில் நாடு முழுவதும் தற்போது சுங்கச்சாவடிகளில் Fastag முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் பல இடங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஒரு சில வாகனங்களுக்கு வசூலிப்பதில் தாமதம் ஏற்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகிறது. எனவே இந்த சிக்கல்களை தீர்க்கும் பொருட்டு விரைவில் அனைத்து சுங்கச்சாக்கடிகளும் அகற்றப்பட்டு வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்கச் கட்டணம் வசூலிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதற்காக சிறப்பு மசோதா கொண்டு வரப்பட உள்ளதாகவும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் சுங்க கட்டணங்கள் 40% வரை குறைக்கப்படுவதாகவும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்

 மேலும் இதற்காக இனிவரும் அனைத்து வாகனங்களுக்கும் ஏற்கனவே உள்ள வாகனங்களுக்கும் சத்தியாக நம்பர் பிளேட் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை உருவாகாது என்றும் நிதின் கட்காரி தெரிவித்தார் 

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??