ஓடும் பேருந்தில் உயிரிழந்தபெண்!! உடனடியாக உதவிய இன்ஸ்பெக்டர்! மக்கள் பாராட்டு.
NEWS COVER
0
ஓடும் பேருந்தில் உயிரிழந்த மனைவி!! தக்க சமயத்தில் கணவருக்கு உதவி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்..
GET NEWS COVER
பேருந்தில் வரும் வழியில் உடல்நலகுறைவால் உயிரிழந்த பெண்ணின்் உடலை கொண்டு செல்ல பணம்்் இல்லாமல் தவித்த கணவருக்கு செங்கல்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி செல்வி. அருணாசலம் தனது மனைவியுடன் சென்னை பல்லாவரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
அருணாச்சலத்தின் மனைவி செல்விக்கு உடல்நிலை குறைவு ஏற்படவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாத நிலையில் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடுக்கு அவரை அழைத்துச் செல்ல அருணாச்சலம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெல்லை செல்லும் விரைவு அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்தனர்.
பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அருணாச்சலத்தின் மனைவி செல்வி மயங்கி இருந்தார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் பேருந்து நடத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் அழைத்து வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
அதன் பிறகு உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல முடிவு செய்தபோது அருணாச்சலத்திடம் அதற்கான பணம் ஏதும் இல்லாமல் பரிதவித்து நின்றார். அப்பொழுது அங்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் அருணாசலத்தின் ஏழ்மை நிலையை அறிந்து தனது சொந்த செலவில் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் உயிரிழந்த செல்வியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மனைவி இறந்த துக்கத்தில் உடலை எடுத்துச் செல்ல பணம் கூட இல்லாமல் பரிதவித்து நின்ற ஒருவருக்கு செங்கல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மனிதாபிமானத்துடன் உதவி செய்த மேற்படி காவல் நிலைய ஆய்வாளர் அசோகனை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்