Breaking News

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி சிறுவன் உயிரிழந்த விவகாரம்!!நிவாரணம் வழங்கிய அரசு.

NEWS COVER
0
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளி சிறுவன் உயிரிழந்த விவகாரம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு.
GET NEWS COVER
செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் தாயாரிடம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் மற்றும் அரசு சார்பில் வீடும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.

சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் பிரியா இவரது மகன் 17 வயதான கோகுல் ஸ்ரீ இவர் மீது தாம்பரம் ரயில்வே போலீசார் ரயில்வே பேட்டரி ரிலே பாக்ஸ் திருடியது தொடர்பாக திருட்டு வழக்கு பதிவு செய்து கடந்த  ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதன் பிறகு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அங்குள்ள காவலர்கள் தாக்கியதில் சிறுவன் கோகுல் ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 மேலும் இதற்காக பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் அரசு வேலையும் அரசு சார்பில் வீடும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதன் பேரில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 2.5 லட்ச ரூபாய் நிதி உதவியும் சமூக பாதுகாப்பு துறை சார்பில் 7.5 லட்ச ரூபாய் நிதி உதவியும ஆக மொத்தம் 10 லட்ச ரூபாய்க்காண காசோலையும் தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இலவச வீடும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 இதற்கான ஆணையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியாவிடம் நேரில் வழங்கினார்.

Tags: தமிழக செய்திகள்