Breaking News

சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

NEWS COVER
0
சென்னையில் நாளை ( 17.02.2023) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
GET NEWS COVER

தமிழகத்தில்  உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

 வேலைவாய்ப்பு முகாம்களில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்கின்றனர்.

அதன்படி நாளை (17.02.2023) சென்னை ஆலந்தூரில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் 8 ம் வகுப்பு முதல் ITI,டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேற்படி முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை 
https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என தகவல் தெரிவிிக்கப்பட்டிருக்கிிறது.

Tags: தமிழக செய்திகள்