மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
GET NEWS COVER
கும்பகோணம் மாசிமக திருவிழாவிற்கு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவி்ட்டு உள்ளது.
கும்பகோணத்தில் மார்ச் 6ம் தேதி நடக்கும் மாசிமக திருவிழாவிற்கு பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடரந்திருந்தார்.
மேலும் அவரது மனுவில் திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்ததை போல மார்ச் 6 ல் நடக்கும் மாசிமகத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமெனவும் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவை விசாராத்த நீதிபதிகள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சாயர் வரும் மார்ச் 1~ம் தேதிக்குள் உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர்.
Comments
Post a Comment