Breaking News

அரசு அலுவலகங்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன?

NEWS COVER
0
அரசு அலுவலகங்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன?
GET NEWS COVER  
 
மின் கட்டணம் செலுத்தாத அரசு துறைகளின் மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆய்வுக் கூட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து ஒழுங்காக மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள மற்ற அரசுத் துறைகளின் அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் மின்வாரிய தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அத்தியாவசிய சேவைகளான மருத்துவம்,குடிநீர்,தெருவிளக்கு, உள்ளிட்டவற்றை வழங்கும் துறைகள் 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்