இந்திய வனப்பணி வேலை!! UPSC அறிவிப்பு!!

இந்திய வனப்பணி வேலை!! UPSC அறிவிப்பு!!
GET NEWS COVER

UPSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசின் உயர்பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

IAS மற்றும் IPS உள்ளிட்ட தேர்வுகளை போல இந்திய வனப்பணியான IFS ( Indian Forest Service Examination) பணிக்கும் மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.

இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ 100 செலுத்த வேண்டும்.

பணியின் பெயர்:
IFS ( Indian forest service examination)

மொத்த காலிப்பணியிடங்கள்: 
             150

வயதுவரம்பு
21 வயது முதல் 32

கல்வித் தகுதி: 
பட்டப்படிப்பு

தேர்வு முறை: 
முதல் நிலை தேர்வு, 
முதன்மை தேர்வு மற்றும் 
நேர்முகத் தேர்வு



விண்ணப்பிக்க கடைசி தேதி.
21.03.2023

மேலும் விவரங்களுக்கு   www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.




Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??