ஆவண எழுத்தர் கட்டண ரசீது கட்டாயம்! பதிவுத்துறை உத்தரவு!!
NEWS COVER
0
ஆவண எழுத்தர் கட்டண ரசீது கட்டாயம்! பதிவுத்துறை உத்தரவு!!
GET NEWS COVER
தமிழகத்தில் தற்போது பத்திரப்பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் ஒரு சில ஆவணங்கள் ஆவண எழுத்தர் மூலமாகவே மேற்கொள்ளப் படுகின்றன. தழிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி சுமார் 5,000க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற ஆவண எழுத்தர்கள் உள்ளனர். மேலும் பல இடங்களில் இதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்பான புகார்கள் உள்ளன.
எனவே இனிமேல் பத்திரபதிவுக்கு வரும் ஆவணங்களில் ஆவண எழுத்தர்களுக்கு எவ்வளவு கட்டணம் வழங்கப்பட்டது என்பதற்கான ரசீது கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டே பதிவுத்துறையால் உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இந்த நடைமுறையை சரிவர பல இடங்களில் கடைபிடிக்கவில்லை.
இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் இனிமேல் பத்திர பதிவுக்கு வரும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் எவ்வளவு கட்டணம் பெற்றார் என்று ரசீதை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அதனை மாவட்ட பதிவாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்