அதிகரி்க்க தொடங்கிய கொரோனா பரவல்!! மீண்டு்ம் மாஸ்க் கட்டாயம்!!
அதிகரி்க்க தொடங்கிய கொரோனா பரவல்!! மீண்டு்ம் மாஸ்க் கட்டாயம்!!
GET NEWS COVER
கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் நேற்று முன்தினம் 123 பேருக்கும் நேற்றும் மொத்தம் 179 பேருக்கும் கொரோனா தொற்று பதிவானது.
இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் அனைவயும் கட்டாயம் 100 சதவீதம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment