தமிழகத்தில் ஒரு புதிய தாலுகா உதயம்! எங்கே? முழு விவரம்.
NEWS COVER
0
தமிழகத்தில் ஒரு புதிய தாலுகா உதயம்! எங்கே? முழு விவரம்.
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தொகுதியில் உள்ள முத்துப்பேட்டை தமிழகத்தின் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்ட செயல்பட தொடங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என்று 2006 2011 ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் மு கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார் ஆனால் அந்த அறிவிப்பு அப்படியே நின்று போனது.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தற்போது முத்துப்பேட்டை பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடிக்கு பல கிலோமீட்டர் தூரம் சென்று வருவதால் சிரமம் ஏற்படுவதாக கூறி முத்துப்பேட்டை தனி தாலுகாவாக மாறுமா என்று கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக செயல்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகாவை துவக்கி வைத்தார் இதன் மூலம் தமிழகத்தில் தாலுகாக்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்