தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் விரைவில் இ சேவை கூட்டுறவுத்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் விரைவில் இ சேவை கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

GET NEWS COVER

தமிழ்நாட்டில் மொத்தம் 33000க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன. 

 அதில் 24,106 கடைகள் முழு நேரமாகவும் , 9,708 நியாயவிலை கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்படுகின்றன. 

தற்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இ சேவை வசதி செயல்படுத்தபட இருக்கிறது. 
மேற்படி இ சேவை மையம் வாயிலாக பாஸ்போர்ட் சேவை, சேவை கட்டணம் செலுத்துதல், ஆதார் திருத்தம், உள்ளிட்ட சேவைகளையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கிராம புறங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் முன்னுரிமை அடைப்படையில் இந்த இ சேவை மையங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இ சேவை வசதிக்காக இந்தியா போஸ்ட் மற்றும் சில தனியார் நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த இ சேவை திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த கூட்டுறவு துறை திட்டமிட்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??