வழிப்பறி வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் நிரந்தர பணிநீக்கம்! DIG உத்தரவு!
NEWS COVER
0
வழிப்பறி வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் நிரந்தர பணிநீக்கம்! DIG அதிரடி உத்தரவு!
GET NEWS COVER
வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் வசந்தியை டிஸ்மிஸ் செய்து, மதுரை சரக DIG பொன்னி உத்தரவிட்டார்.
நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் வசந்தி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அர்சத் என்பவரிடம் , 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணத்தை பறித்தார். இதுகுறித்து அர்சத் புகாரளித்ததன் பேரில் வசந்தி உட்பட 5 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனிடையே நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ள வசந்தி இந்த வழக்கின் சாட்சியான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒருவரை மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த வசந்தியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஜாமினில் உள்ள நிலையில் வழக்கின் சாட்சியை மிரட்டிய புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதால் காவல் ஆய்வாளர் வசந்தியை நிரந்தர பணிநீக்கம் செய்து மதுரை சரக DIG பொன்னி உத்தரவிட்டார். இந்த உத்தரவு சிறையில் உள்ள வசந்தியிடம் வழங்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்