Breaking News

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!! ஜார்கண்டில் அதிசயம்!!

NEWS COVER
0
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!! ஜார்கண்டில் அதிசயம்!!
GET NEWS COVER

ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா மாவட்டத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த அங்கிதா என்ற கர்ப்பிணி பெண் (RIMS) ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவ சோதனை செய்ததில் அவரது கருப்பையில் 5 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். 

ஆனால், அந்த பெண் இந்த பிரசவத்தை செய்து கொள்ள விரும்பம் தெரிவித்ததின் பேரில் மருத்துவர்கள் துணிந்து அந்த பிரசவத்தை செய்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிதாவிற்கு உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் 7 மாத குழந்தைகளாக 5 பெண் குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளன. 

7 மாதத்தில் பிறந்ததால் வழக்கத்தை விட எடை குறைவாக இருப்பதால் தற்போது 5 பெண் குழந்தைகளும் NICUவில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பது 6.5 கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசயமான நிகழ்வு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags: தேசிய செய்திகள்