கள்ளசாராய மரணம்!! தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!!!
Unknown
0
கள்ளச்சாராய மரணம்!! தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!!!
GET NEWS COVER
தமிழகத்தில் கள்ளச்சாராய மரண விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை 2 பேர் உயிரிழந்தனர்.
தற்போது 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் பாதிக்கப்பட்ட 10 பேரும் எத்தனால் மற்றும் எத்தனால் கலந்த கள்ளசாராயத்தை அருந்தி இருக்கலாம் என்றும் இது தொடர்பாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பளர்கள் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்