பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!! அமைச்சர் அறிவி்ப்பு!
Unknown
0
பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!! அமைச்சர் அறிவி்ப்பு!
GET NEWS COVER
6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஜூன் 5 ம் தேதி பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் ஜூன் மாதம் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்