மாணவ மாணவிகளுக்கு இலவச பயண அனுமதி!! போக்குவரத்து துறை உத்தரவு.!
NEWS COVER
0
மாணவ மாணவிகளுக்கு இலவச பயண அனுமதி!! போக்குவரத்து துறை உத்தரவு.!
GET NEWS COVER
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்திற்கு அனுமதிக்கும்படி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன் மாதம் 7 ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஏற்கனவே சென்ற ஆண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச பயண அட்டையை காட்டியும் பயணம் செய்யலாம் என்றும் மேலும் பள்ளி சீருடை அணிந்து இருந்தாலே அவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்கும்படி அனைத்து போக்குவரத்து மண்டலங்களுக்கும் தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாணவி மாணவிகளை பயண அட்டை கேட்டு இறக்கிவிடும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்