Breaking News

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

NEWS COVER
0

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

GET NEWS COVER
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் (19.6.2023 )மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் உச்சத்தில் இருந்தது. அந்த நிலை தற்போது மாறி கடந்த 2 நாட்களாக வெயிலின் அளவு சற்று குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்தது. நேற்று இரவு முதல் இன்று விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

 மேலும் மற்ற மாவட்டங்களின் நிலை குறித்து இன்னும் சில நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: வானிலை செய்திகள்